மறந்துபோன காட்சி ஒன்று வடபழனியில் ரோடோரம் கண்டேன் ...
கயற்றில் ஆடும் சிறுமி .....மேளத்தோடு கீழே ஒரு பேரிளம்பெண்
அன்னையாக இருக்ககூடும் ......
கயறு ஆடுவதுபோல் ஆடிகொண்டிருக்கும் கலை .....
முன்பெல்லாம் ஊர் திருவிழா என்றால் குறவன் குறத்தி ஆட்டம் ,
அல்லது மேடை நாடகம் ......
சிறுவயதில் தெரு நண்பர்களுடன் சேர்ந்து முதலில் இடம் பிடிக்க ஓடுவோம் ...
ஆனால் எப்போதும் குறவன் குறத்தி ஆட்டத்தில் பெருசுகள் அருகில் விடவே மாட்டார்கள் ....
காரணம் பலவருடம் புரியாமலே இருந்தது ,,,,,,
மேடை நாடகம் எப்போதும் அர்ஜுனன் தபசு ....அல்லது மகாபாரதத்தில் பாஞ்சாலி கதை ...
பெரும்பாலும் வருடாவருடம் பார்ப்பது என்றாலும் அலுப்பு தட்டுவதேயில்லை .
கீற்று அறைக்குள் ஓடிவிடுவோம், அங்கய்தான் அர்ஜுனன் அலங்காரம் நடக்கும் .
அவர்கள் வைத்திருக்கும் பவுடர்களை தொட்டு பார்பதுண்டு .அதுக்கும் எங்களிடையே போட்டி ....
பின்னிரவில் ஏதொரு விடுமுறை நாளில் நண்பர்கள் சேந்து நடிப்பது போல் பாவனை செய்வதுண்டு ...
நாளாக நாளாக மேடையில் நாடகம் போய் orchestra வந்துவிட்டது ......
அதிலும் ஆட்டம் பாட்டு என்று ...
பெரும்பாலும் மதுரையிலருந்து தான் குழு வரும் ... இரவு முழுக்க கண் விழித்து பார்த்தாலும் ,
ஏதோ ஒன்று நழுவிவிட்டது போலவே தோன்றும் .....
நாடகமும் குறவன் குறத்தி ஆட்டமும் பனி படலம் போல் கண்ணில் நிக்கும் ...
இன்று
காலம் அத்தனையையும் விழுங்கிவிட்டது .....
தமிழ் கலைகள் எல்லாம் மறக்கடிக்க பட்டுவிட்டது .....
தமிழ் தமிழ் என்று கூவும் தமிழ் அறிஞர்கள் , மற்றும் அரசியல்வாதிகள் யாரும் அந்த கலைகளை மீட்டு எடுக்க
முயற்சி செய்வதை காணோம் .....
கலைஞர் அய்யா இந்திரவிழா என்று ஒன்று நடத்தினர் ,,, இன்று அப்புடி என்றால் என்ன என்று கேட்கும் நிலைமை ...
வருடாவருடம் சென்னையில் நடந்துவந்த சங்கமம் ..இனி அதன் கதி என்னவோ .....
எவ்ளோ தொலைகாட்சிகள் உள்ளது பணம் பண்ணும் குறி தானே தவிர கலை வளர்ப்பதை காணோம் ....
DD நேஷனல் மட்டுமே எப்போவது ஒளிபரப்புகிறது ....
தமிழ் கலாச்சாரம் உடுத்தும் உடையில் மட்டுமல்ல போர்க்கொடி தூக்குபவர்களே இது போன்ற கலைகளிலும் உள்ளது .
தமிழ் உணர்வாளர்கள் மட்டுமே அழியும் இதுபோன்ற கலைகளை மீட்டு வர முடியும் .