Saturday, 24 March 2012

ஊற்று கண்


வெய்யிலின் தாகம் உடம்பின்  நீர் அனைத்தயும் உறிஞ்சிவிடும் போல இருந்தது 
வெம்மையின்  பிடியிலிருந்து தப்பிக்க மொட்டைமாடியில் சற்று நடந்துகொண்டிருதேன் ...
பக்கத்துக்கு வீட்டில்  மண்டிக்கிடந்த  சிறு புதர்களை வெட்டிகொன்டிருன்தனர்.
அபோதே தென்பட்டது கம்பி வலையில் மூடப்பட்ட கிணறு ......
அதை பார்த்தவுடன் பாசியில் வழுக்கி விழுந்தாற்போல் மனம் எங்கோ போய்விட்டது ...

.....................
அது ஒரு இளவேனிற்காலம் ........
எப்போது அவிழுமோ என்று கால்சட்டையை பிடித்துகொண்டு நடந்த காலம் 
பகல் முழுதும் வெய்யிலில் திரிந்து கொண்டு இருந்து ,அந்தியில் கிணற்று நீரில் குளியல் நடக்கும் 
உடம்பில் படர்ந்த  வெம்மையும் புழுதியும் ஒன்றாக கரைந்து  இறங்கும் .....
இன்பமான குளியல் ........
எப்போதும் இந்த கிணற்று நீருக்கு அப்படி ஒரு குளிர்ச்சி ......
தாத்தா எப்போதும் அதை கிணறு என்று சொல்ல மாட்டார் , அமுத ஊற்று என்றே சொல்லுவர் .
மிகையொன்றுமில்லை , நீரின் சுவை ஊர் பிரசித்தம் .......
கோடையில் தன்னுள்ளே ஈரத்தை வைத்துகொண்டு வாரி வாரி கொடுக்கும் சுரபியேதான் அந்த கிணறு //////

கிணறு என்றல் வட்ட உறைகள் இறக்கப்பட்ட கிணறு அல்ல ....
சுமார் நூற்றி பத்து வருடங்களுக்கு முன்னே தோண்டப்பட்டது .....
உறைகள் இல்லாத காலம் .......
காலத்தின் முனேற்றமாய் சிலவருடங்கள் கழித்து கிணற்றின் மேல் பரப்பில் செங்கல் சுவரும் ( சுமார் 4 அடி உயரம் இருக்கும் )
நிலபடுதியில்  செங்கல் தரையும் அமைக்கப்பட்டது .
முழுவதுமாக அடைத்து ஒரு அறை போல்  கட்டுவதற்காக நான்கு புறமும் தூண்கள்  எழும்பி நின்றன  
கடைசி வரை தூண்களாகவே.....
கிணற்றின் உள்ளே எட்டி பாற்பதர்க்கு எனக்கு உயரம் பத்தாது.. அதோடு பயம் வேறு ...
சற்று வளர்ந்த பின்னே எட்டி பார்க்க தோணும் ..
உள்ளே கிணற்று  மண் சுவர்களில் செழித்து வளர்ந்து கிடக்கும் அரசன்குட்டிகளும் ,வேப்பம்குட்டிகளும்  வேர்களை ஊஞ்சலாடியபடி 
பசேலென்று இருக்கும் ....
மழை காலங்களில் அதுவும் பார்க்கமுடியாது ... கிணற்று நீர் நிரம்பி வழியும்  காயசண்டிகை கொடுத்த அமுத சுரபி போல் ......
நானும் அக்காவும் மொண்டு மொண்டு விசிறிகொள்வோம்

ஒரு போதும் கிணறு வற்றி நான் பார்த்ததில்லை .... 
காலம் தான் எண்களின் அன்பை வற்றி போட்டு விட்டது ......
அத்தைகளும் சித்தப்பாக்களும்  நிறைந்த வீடு 
சண்டை சச்சரவிருக்கு குறைவில்லை 
ஆனாலும் கிணற்றின் குளிர்ச்சியான  குளியலில் அனைத்தும் வடிந்து போகும் எனக்கு ....
வருடகணகாய் இழுத்து இறைக்கப்பட்ட நீரில் அனைவரின் அன்பும் கரைவதை  யாரும் அறியவில்லை 
கிணற்றின் நான்கு தூண்களும்  ஒரு மௌன சாட்சியாய் எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்தது ....
எத்தணை சண்டைகள் , எத்தணை சந்தோஷ தருணங்கள் , எத்தணை விளையாட்டுகள்  இந்த கிணற்றடியில் 
மனித மனங்கள்  மாறினாலும் , மாறது  சுரக்கும் கிணற்று  நீரின் குளிர்வை  உணர ஆள் இல்லாமல் போனது 

நான் உயர்வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது  வழக்கம் போல் ஒரு குளியல் ...
பொதுகென்று தரை கீழிறங்கியது  அது தான் கிணற்றின் முதல் வெளிபாடு 
பொங்கி கிடக்கும் நீரை இறைக்க ஆளில்லாமல்  போனால்  கிணற்றால் அதன் ஆற்றாமையை வேறு எப்புடித்தான் வெளிபடுத்தமுடியும்
இருந்தும் எனக்கு கசக்கவில்லை 
எனது  சிறுபிராய நினைவுகள் அவற்றோடு சேர்ந்தவை .....
கிணற்றின் ஊற்றைபோல் கண்ணுக்கு தெரியாமல் பொங்கி கிடப்பவை .....

ஒரு கட்டத்தில் குழாய்கள் வந்து கிணற்றை தனியாக தள்ளி விட்டது .......
எப்போதும் ஈரம் படிந்து கிடக்கும் அதன் தரைகளில்  புற்கள் வெடித்து கிளம்பியது ....
மனிதர்கள் ஒருபோதும் அறியவில்லை அதன் ஏக்கத்தை 
அவர்களுக்கு வீட்டினுள் குழாய் திறந்தால்  பெருகி ஓடும் நீர் ... வேறு என்ன வேண்டும் ...
ஆனால் எனக்கு எப்போதும் கிணற்று நீர்தான் .......
சிலீர் என்று வழியும் அந்த நீருக்கு ஈடு இணையேது /......
கொஞ்சகாலம் நானும் கிணறும் தனிமையிலே இறைதுக்கிடந்தோம் 
பௌர்ணமி இரவுகளில் கிணற்று மேடையில் அமர்ந்து உள்ளே கிடந்தது மிளிரும் 
நிலவை  பார்க்க ஜென்மம் போதாதே ......

பல முறை தட்டை தூக்கிகொண்டு அங்கே சென்று அமர்ந்து  சாப்பிடுவேன் ......
சலசலத்து  ஒளிரும் நீர் எனக்குள்ளே ஏதோ ஒன்றை  உணர்த்தியது போலவே இருந்தது ....

இரவில் நிலவில் கிணற்று நீரின் அழகை எத்துனை பேர் ரசித்திருக்க முடியும் \
எனக்கு தெரியவில்லை 

கிணறும் அதன் சுற்றும் பெண்களுக்கானவை என்பது அதை ரசிக்காமல் விட்டவர்களின் கூற்று ....

ஏகாந்தம் பொழியும் அந்த இரவில் கிணற்றின் குளிரிசியுநூடே  உறங்கி போனேன் ...
நடு இரவில் பெரும் சத்தம் பாறைகளை தண்ணீர்க்குள் தள்ளியது போன்று ....
கொல்லை திறந்து பார்த்தால் பெரும் சோகம் எனக்கு 
பெரும் சத்தத்துடன்  இடிந்து  அமிழ்ந்து கொண்டிருந்தது அமுத சுரபி 
பொழியும் நிலவின் இரவில் ....
தன்னுடன் இந்த உறவுகளின் , வாழ்வின் பெரும் துயரை புதைத்து கொண்டது .....
கண்களில் ஏனோ கண்ணீர்  தினமும் நான் குடிக்கும் கிணற்று நீரின் வெளியற்றம் போலும் 

புறகணிக்க படும் எதுவும்  நெடுந்துயரை  அனுபவிப்பதை யாரறிவார் ?
கிணறு புதைந்தாலும் அதன் ஊற்று இன்றும் ஓடி கொண்டிருக்கும் 
தனது ஆனந்த காலங்களை சுமந்தபடி ..........

பெரு நகரங்களின்   பழமையான வீடுகளின் பின்புறம் கிணறுகள் இருக்கலாம் 
ஆனால் அவைகளுக்குள் பாசி படிந்து கிடக்கும்  துயரங்கள் எத்தனையோ .....
கம்பி வலைக்குள் கிடக்கும்  கிணற்றின் கதைகள் ஆயிரம் ஆயிரம் 
ஆனால்  கேட்கத்தான் 
ஆளில்லை .....


கனவுகளின் வேட்கை

கனவுகளற்ற இரவுகள் வருவதேயில்லை 
பெருங்கனவுகள் தீராத சாபங்களாய்
குருதியில் படிந்து கிடக்கும் கனவுகள் 
இந்த கனவுகளின் வேட்கை தீரப்போவதில்லை 
விழித்துகிடக்கும் இரவுகளின் துயரம் தீராதது 
தனிமையற்ற இரவின் பெரும் போராட்டம் 
துயரம் தோய்ந்த கனவுகளுடன் .
தூக்கத்தின் மிச்சங்களை போர்வையின்
நுனியில் தேடியபடியே 
 

Thursday, 23 February 2012

உதிரும் இலை 
காற்றில் எழுதிச்செல்கிறது 
இயற்கையின் பெரும் ரகசியத்தை

தேடித்தேடி

ஓ மானிடனே
விருட்சத்தின் வேரறுத்துவிட்டு
வெற்றிடத்தில் எதை தேடுகிறாய்
காற்றும் அலைகிறது பெருவெளியில்
தரு தேடித்தேடி
இந்த புவியும் அழியும் ஒருநாள்
அண்ட பெருவெளியில் ஒரு துகளாய்
கரையும் 
ஓ மானிடா
மறைவதற்கும் மாற்றுவதற்கும்
வேறு இடமா தேட போகிறாய்

இயற்கையின் கண்ணீர்

மழை 
இயற்கையின் கண்ணீர்
காடுகளின் மயானத்தின் மீது ,
இனியொரு மரம் நடுவோம்
இயற்கையோடு இசைந்தே
வாழுவோம்

நிழல் திருடன்

ஓ மானிடனே
நிழல்களை திருடிவிட்டு
வெய்யிலை விதைத்து கொண்டிருக்கிறாய்
ஒருநாள் அதுவும் அறுவடையாகும்
யாருக்கும் தெரியாமல்
என்ன செய்ய போகிறாய் ?